Total Pageviews

Thursday, September 1, 2011

வினை தீர்க்கும் விநாயகனே



யானை முகத்தோனே!
பானை வயிற்றோனே!
ஞாலம் காக்கும்
முகத்தினில் தும்பிக்கை
“சூலம்” கொண்டோனே

எல்லோர் சொல்லும் கேட்க
பெரிய காது கொண்டானே...
என் பாவம் தின்று தின்று
பானை வயிறு கொண்டோனே....

“அம்மைஅப்பன்” சுற்றி வந்து
ஞான பழம் நீ தின்று
அகிலம் எது என்று
ஞானம நல்கிட்டாய் ..



மற்ற கடவுள்
எல்லோரும் ஓரிடம் அமர ..
நீ எல்லோரிடமும்
அமர்ந்தாய்.....
ஆதி ஆனாய்
அத்துனை அகிலதிற்கும்..
என்துணை  நீயே
இன்முகத்தோனே...


உனக்கென தனி இடம்
வேண்டாது
குளக்கரை குந்திக்கிட்டு
அரசமரம் அமர்ந்திருந்து
ஆண்டியும் அல்லல் தீர
அருள் புரிந்தாய்....


அன்பு தழைத்திட
அமைதி ஓங்கிட
அகிலம் எல்லாம்
ஒன்று என்றிட
அருள் தருவாய்
விநாயகனே ....







No comments:

Post a Comment